பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம்! - திருப்பூர் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட ராயபுரம், அணைமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்காமல், போலி ஆவணங்கள் மூலம் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் தனி நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடந்தையாக இருப்பதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, வீடுகளில் கறுப்புகொடி கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.