Budget 2022: 'கல்வித் துறைக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்' - பட்ஜெட் 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14348519-thumbnail-3x2-schoo.jpg)
சென்னை: 2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல்செய்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார ஆலோசகர்கள் எனப் பலரும் தங்களது கலவையான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி கூறுகையில், "மத்திய அரசின் பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளைத் தரம் உயர்த்துவது குறித்தும், பொதுப்பள்ளிக்கான வழிமுறைகள் குறித்தும் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வணிக ரீதியான கல்வியை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அறிவிப்புகள் உள்ளன. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மேலும் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.