‘கல்வி கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தின் சார்பில் வில்லுப்பாட்டு மூலம் பயிற்சி வகுப்பு தொடக்கம்! - கல்வி கற்போம் எழுதுவோம்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தின் சார்பில் வரும் நவ. 23ஆம் தேதி கல்வி கற்பிக்கும் பணி தொடங்கவிருக்கிறது. இதன், முதல் கட்டமாக நவ. 6, 7 ஆகிய தேதிகளில் திருச்சியில் மாநிலங்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட கருத்தாளர்கள் வட்டாரத்திற்கு இரண்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் வீதம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் என 27 பேருக்கு மாநிலக் கருத்தாளர்கள் வில்லுப்பாட்டு மூலம் இன்று (நவ. 11) பயிற்சியளிக்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடங்கிவைத்தார்.