எழுபது அடி ஆழக் கிணற்றில் விழுந்த மான் பத்திரமாக மீட்பு
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் அடுத்த மானவல்லி கிராமப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (48) என்பவருக்குச் சொந்தமாக 70 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இங்கு கல்லேறி என்ற பகுதியில் இருந்து தண்ணீர் அருந்த மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவது வழக்கம்.
அந்த வகையில் வந்த மான்களைக் கண்டு நாய்கள் துரத்தியதால் மான்கள் வேகமாக ஓடிச்சென்றுள்ளன. இதில், ஆண் மான் கிணற்றில் விழுந்த நிலையில் பெண் மான் தப்பி ஓடியுள்ளது. அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் விழுந்த ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.