காவலர்கள் கரோனா விழிப்புணர்வு பேரணி! - Corona Awareness Rally
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக கரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், பேரணியாக இருசக்கர வாகனத்தில் பிரதான வாணியம்பாடி செல்லும் சாலை வழியாக தூய நெஞ்சக் கல்லூரி வரையும், அங்கிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இப்பேரணியில், பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, முகக்கவசம் மற்றும் கரோனா தொற்று குறித்து அச்சிடப்பட்ட தொப்பியும் வழங்கப்பட்டது.