குன்னூரில் ஆடல் பாடலுடன் கொண்டாடப்பட்ட ஓணம்! - சிறப்பு வீடியோ
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா வரும் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குன்னூரில் பெண்கள் சார்பில், கோலாகலமாக ஓணம் திருவிழா நடத்தப்பட்டது. இதில், கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து இயற்கையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி, தானியம், வண்ண நுால்களுடன் அத்தி பூ கோலம் இட்டு மாவலியை வரவேற்றனர். இதுமட்டுமில்லாமல் திருவாதிரைக்களி எனப்படும் பாரம்பரிய நடனத்தில் ஏராளமான பெண்கள் ஆடி அசத்தினார்கள்.