கருவூல அலுவலகத்துக்குள் புகுந்த நாகப்பாம்பு: ஊழியர்கள் அலறி ஓட்டம் - Cobra enters treasury office in thiruvannamalai
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்ட தாலுகா அலுவலகத்தில் சார்நிலை கருவூல அலுவலகம் உள்ளது. இங்கு ஆவணங்கள், கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று வழக்கம்போல் (பிப்.11) ஊழியர் ஒருவர் ஆவணம் எடுக்க அறையை திறந்துள்ளார்.
அப்போது மூன்று அடி நீள நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டு சத்தம் போட்டார். சத்தம் கேட்டு சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பெட்டியின் அடியில் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
TAGGED:
திருவண்ணாமலை மாவட்ட செய்தி