மோடியை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பாஜகவினர் சாலைமறியல் - குத்தாலம்
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்டம் குத்தாலத்தில் மக்கள் விசாரணை மன்றம் என்ற நிகழ்ச்சி சிபிஎம் கட்சியால் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் மோடியை தவறாக பேசியதாக கூறி பாஜகவினர் குத்தாலம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்ததால், மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட பாஜகவினர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.