பள்ளியின் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை ; முன்னாள், இன்னாள் மாணவர்கள் பங்கேற்பு! - டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் படித்த பலர் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வந்த இப்பள்ளியில் கட்டடங்கள் பழுதடைந்ததையடுத்து, அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளியின் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் தங்கள் நினைவுகளை பரிமாறிக்கொண்டனர்.