'ரஜினியின் முடிவுக்கு தலை வணங்குகிறேன்' - இயக்குநர் பாரதிராஜா - Rajinikanth bow out to politics
🎬 Watch Now: Feature Video
தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, கட்சி தொடங்கும் முடிவையும், அரசியலுக்கு வரும் முடிவையும் கைவிடுவதாக, நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார்.
இதையடுத்து அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், " ரஜினியின் இந்த முடிவுக்கு தலை வணங்குகிறேன். அவர் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்" என தெரிவித்துள்ளார்.