மயிலாடுதுறையில் அனைத்துக் கோயில்களும் திறப்பு... - all the temples in tamilnadu are open today
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே 10ஆம் தேதி முதல் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கோயிலில் அர்ச்சகர்கள் மட்டும் நித்திய கால பூஜைகளை செய்து வந்தனர். இந்நிலையில் கரோனா பரவல் சற்றே குறைந்துள்ளதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 5) முதல் மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான பரிமள ரெங்கநாதர் கோயில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.