பிரிட்டன் ஜிபி தகுதிச் சுற்று: அசுர ஆதிக்கம் செலுத்தும் மெர்சிடிஸ் அணி - Formula one highlights
🎬 Watch Now: Feature Video
லண்டன்: கோவிட்-19 பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம், கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரியாவில் தொடங்கப்பட்டது. தற்போது வரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றில் இரண்டில் மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்று 63 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு பிரிட்டனிலுள்ள சில்வர்ஸ்டோன் டிராக்கில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. அதில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன், வால்டேரி போடாஸ் முதல் இரண்டு இடங்களை பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மூன்றாவது இடத்தை பெற்றார்.