'நான் பாட்டுக்கத் தானடா இருந்தேன்' - கேமராமேன் வாயில் பந்தை அடித்த டென்னிஸ் வீரர்! - டென்னிஸ் வீரர் வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video

சீனா ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஜுவரெவ் அடித்த பந்து மைதானத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த வீடியோ கலைஞரின் வாயில் சடாரென பட்டது. பின்னர் ஜுவரெவ் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்பது போன்று பேட்டை உயர்த்திக் காட்டினார். இதைத் தொடர்ந்து அந்த நபரும் 'பராவில்ல பாஸ், இதெல்லாம் போட்டியில் சகஜம் என்பது போல்' சிரித்தார். நேற்றை போட்டியில் அலெக்சாண்டர் ஜுவரெவ் 7-6, 7-6 என்ற செட்கணக்கில் பிரஞ்ச் வீரர் ஜெராமி சார்டியை வீழ்த்தினார்.