ஸ்ரத்தா கபூருக்கு திடீர் பரிசு, நெகிழ்வித்த வருண் தவான் - ஸ்ரத்தா கபூருக்கு பரிசளித்த வருண் தவான்
🎬 Watch Now: Feature Video
'ஸ்ட்ரீட் டான்ஸர்' திரைப்படத்தின் புரமோஷனை சண்டிகரில் முடித்துவிட்டு நடிகர் வருண் தவானும் நடிகை ஸ்ரத்தா கபூரும் மும்பை விமானநிலையத்திற்கு வந்துகொண்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சைலோஃபோன் இசைக்கருவியை பார்த்த ஸ்ரத்தா கபூர் அதனை வாங்க ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால் அந்நேரத்தில் ஸ்ரத்தாவிடம் பணமில்லாத காரணத்தினால், அதை வருண் தவான் வாங்கி ஸ்ரத்தாவிடம் கொடுத்தார். இந்த திடீர் பரிசால் நெகிழ்ந்து போன ஸ்ரத்தா, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, வருணுக்கு நன்றி தெரிவித்தார்.