எனக்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு ஓப்பனிங் 'சைக்கோ' - உதயநிதி ஸ்டாலின் - சைக்கோ பட விமர்சனம்
🎬 Watch Now: Feature Video

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியானப் படம் சைக்கோ. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் படத்தை பற்றி ரசிகர்களின் கருத்துக்கள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
அதில், இந்த படத்தின் மூலம் எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஓப்பனிங் கிடைத்துள்ளது. நாங்கள் நினைக்காத இடத்திலெல்லாம் கைத்தட்டல் வருகிறது. இதனை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சைக்கோவாக ஒரு கதாப்பாத்திரம் எதற்கு மாறியது. அதற்கு சமூகமும் ஒரு பொறுப்பு. அதுமட்டுமல்லாமல் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார். ஒன்று சைக்கோ கதாபாத்திரம். மற்றொன்று கண் தெரியாத கதாபாத்திரம். நான் கண் தெரியாத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன் என்றார்.