வளசரவாக்கத்தில் சிவகார்த்திகேயன், சீமான் வாக்களிப்பு - சீமான் வாக்களிப்பு
🎬 Watch Now: Feature Video
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் வேலன் நகரில் உள்ள குட் செப்பர்டு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளியில் வாக்களித்தார். அதேபோல் மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி, போரூர் அருகே உள்ள காரம்பாக்கம் பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.