ஹிஜாப் தடை: 'அம்பேத்கர் இருந்திருந்தால் கண் கலங்கியிருப்பார்'! - ஜனநாயக உரிமை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14751878-thumbnail-3x2-chennai.jpg)
சென்னை: ஹிஜாப் அணியத் தடை விதித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் (மார்ச் 16) இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 'இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக உரிமையை மீறுவதாக பாஜக அரசு, கல்வித்துறை உள்ளிட்டவற்றின் தூண்டுதலால் கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்தது. மாணவர்கள் கர்நாடக நீதிமன்றத்தின் அமர்வை, உச்ச நீதிமன்றம் கண்டிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். மேலும், மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பாஜக, ஆர்எஸ்எஸ் பறிக்கிறது என்றும்; இந்த தீர்ப்பைக் கண்டு அம்பேத்கர் இருந்திருந்தால் கண் கலங்கிருப்பார் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST