ஒடிசா கடற்கரையில் 2.50 லட்சம் ஆமைகள்! - ஆமை முட்டை
🎬 Watch Now: Feature Video
ஒடிசாவில் உள்ள பிடர்கனிகா தேசிய பூங்காவிற்குள் உள்ள கஹிர்மாதா கடல் சரணாலயத்தின் நாசி-1 மற்றும் நாசி-2 தீவுகளில் மார்ச் 25ஆம் தேதியன்று இரவு 2 லட்சத்து 45 ஆயிரத்து 188 ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தன. கடந்த முறை மார்ச் 9 முதல் மார்ச் 23 வரை 3 லட்சத்து 49 ஆயிரத்து 694 ஆமைகள் முட்டையிட்டன. இந்த நிலையில் கடற்கரையில் 30 அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆமைகளைப் பாதுகாப்பதற்காக காஹிர்மாதா கடல் சரணாலயத்திற்குள் நவம்பர் 1 முதல் மே 31 வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. 100 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்ட ஆமைகள் இனப்பெருக்க நோக்கத்திற்காக இடம்பெயரும். ஆனால் இனப்பெருக்க காலத்தில், பெண்கள் கரைக்கு வந்து, 12-20 அங்குல ஆழமான காய்ந்த மணலில் துளையிட்டு, அங்கு சுமார் 100-150 முட்டைகளை இடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST