குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த பூம்புகார் எம்எல்ஏ - பூம்புகார் எம்எல்ஏ
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியிலுள்ள 3 வார்டுகளில் அதிமுக இரண்டு வார்டுகளையும், திமுக ஒரு வார்டையும் போட்டியின்றி கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள 15 வார்டுகளுக்கான தேர்தலில் 16 ஆயிரத்து 430 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தரங்கை பேரூராட்சியில் 1 மணி நிலவரப்படி 41.28 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளது. தவுசமுத்து நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வார்டு எண் 14இல் நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகன் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST