பூமலைச்சி அம்மன் கோயில் மஞ்சுவிரட்டு! - மஞ்சுவிரட்டு
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் அருகே உள்ள குமாரபேட்டை, என்.வைரவன்பட்டி, ஆத்தங்குடி, சென்னல்குடி பட்டி, திருமுக்கனிபட்டி ஆகிய ஐந்து ஊர் நாட்டார்கள் ஒன்றிணைந்து குமாரப்பேட்டை பூமலைச்சி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கோயிலில் இருந்து ஐந்து ஊர் நாட்டார்கள் ஒன்றிணைந்து பட்டு எடுத்து வந்து தொழுவில் பங்கேற்ற 235 மாடுகளுக்கு வேட்டி, துண்டுகள் வழங்கி மரியாதை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கும் பங்கேற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கினர். மேலும், மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST