களைகட்டியது பங்குனி பொங்கல் விழா: தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம் - களைகட்டியது பங்குனி பொங்கல் விழா
🎬 Watch Now: Feature Video

சிவகங்கை: மண்பாண்டத் தொழிலுக்கு பெயர் போனது மானாமதுரை. இங்கு தயாரிக்கும் மண்பாண்டங்களை தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பங்குனி பொங்கல் விழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மானாமதுரையில் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST