கத்தியை காட்டி மதுபானம் பறிப்பு! குடிமகன்கள் அட்ராசிட்டி! சிசிடிவி வைரல்! - Puducherry
🎬 Watch Now: Feature Video
Published : Oct 7, 2023, 8:50 PM IST
புதுச்சேரி: கிழக்கு கடற்கரை சாலை லாஸ்பேட்டை பகுதியில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைக்கு 2 இளைஞர்கள் மது பாட்டில்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது விலை உயர்ந்த வகையான விஸ்கி பாட்டில்களை இருவரும் வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்பு மது பாட்டில்களுக்குரிய பணத்தை கேஷியர் கேட்ட நிலையில், உடனே அந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த பட்டாக்கத்தியை வெளியே எடுத்து கேஷியரை மிரட்டி உள்ளனர். இதை பார்த்து கேஷியர் பயத்தில் அதிர்ந்து போனார். பின்பு 2 பேரும், பணம் கொடுக்காமல் விஸ்கியுடன் கூலாக நடந்து சென்றனர்.
இளைஞர்கள் மிரட்டியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் அந்த கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ச்சியாக மதுக்கடைகள் தொடர்பான பல குற்றங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி! வங்கிகள் அலட்சியமா? குறுஞ்செய்தியால் வந்த குழப்பம்?