"குடிக்க தண்ணீர் இல்லை" - கோவில்பட்டியில் கனிமொழி காரை வழிமறித்த பெண்கள்! - Minister Geetha Jeevan
🎬 Watch Now: Feature Video

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. கனிமொழி, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சியில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பூங்கா பணிகளையும் கனிமொழி தொடங்கி வைத்தார். மேலும், தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக, கழுகுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள காரில் சென்ற எம்.பி கனிமொழியை வானரமுட்டி கிராமத்தில் வழிமறித்த பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் வரவில்லை என்றும், இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்து ருவதாகவும் முறையிட்டனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பெண்கள் கலைந்துச் சென்றனர்.