அரேப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம் - ஈரோடு மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் உள்ள கோட்டாடை,மாவள்ளம், ஒசத்தி ஆகிய இடங்களில் பெய்த கன மழை காரணமாக ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஓடைகளில் இருந்து வரும் வெள்ள நீர் அரேப்பாளையம் பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதனால் ஆசனூர் கேர்மாளம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீரின் வேகம் காரணமாக வாகனங்கள் கரையிலே அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரம் வெள்ளம் வடிந்த பின்பு ஆசனூர் இடையே போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. காட்டாற்று வெள்ளம் திடீரென சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் மரம் செடிகளுடன் அடித்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST