கோவை: மலைக் கிராமத்தில் குட்டிகளுடன் வந்து நீர் அருந்தும் காட்டு யானைகள்! - காட்டு யானைகள் வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
கோவை: கோடை வெயில் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நீருக்காகவும், உணவுக்காகவும் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன. அவ்வாறு வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத் துறையினர் சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடாகம் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டி ஊராட்சிக்குள்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய மருதம் கரை கீழ்பதி கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு குட்டிகளுடன்வந்த காட்டு யானைகள் தொட்டியில் நீர் அருந்துவதை அங்குள்ளவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.