தென்னை தோட்டத்தைச் சேதப்படுத்தி காட்டு யானை அட்டூழியம்..! சிசிடிவி காட்சிகள் வைரல்.. - coimbatore news
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 10:37 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.இவர் அப்பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி காட்டு யானை ஒன்று சக்திவேலுக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் புகுந்து 100க்கும் மேற்பட்ட தென்னை கன்றுகளைக் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளது.
பின்னர் சொட்டு நீர் செல்லக்கூடிய தண்ணீர் பைப்புகளை உடைத்து உள்ளது. இது தொடர்பான காட்சி அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கோமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் ”வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தி விடுகின்றன.
இதன் காரணமாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். வனப்பகுதியிலிருந்து வெளியே வரும்போது காட்டு யானைகளைக் கண்காணித்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில், பயிர் சேதங்களுக்கு அதிக இழப்பீடு தொகை வழங்குவது போல் தமிழ்நாட்டிலும் கொடுக்க வேண்டும். இந்நிலையில் காட்டு யானை விவசாய நிலத்திற்குள் புகுந்து தண்ணீர் பைப்புகளை சேதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வளை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.