Chembarambakkam Lake: அதிகரிக்கும் நீர்வரத்து - நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - tamilnews

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 20, 2023, 7:25 PM IST

திருவள்ளூர்: வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் தற்போது வரையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. 

சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, போருர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது வந்தது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஜெமின் கொரட்டூரில் அதிப்படியாக 84 மி.மீ மழையும், பூவிருந்தவல்லியில் 74 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னைக்கு குடி நீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுவட்டத்தில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரவரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு 1146 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 

ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் 2403 கன அடியும், ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 19.17 அடியாவும் உள்ளது. மேலும் நேற்று ஏரியின் நீர்மட்டம் 2309 கன அடியாகவும் நீர்வரத்து 225 கன அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.