போதையில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்து இளைஞர்கள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ..! - பரமத்தி
🎬 Watch Now: Feature Video


Published : Nov 13, 2023, 8:03 PM IST
நாமக்கல்: நாமக்கல்லில் பிரதான சாலையில் மது போதையில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளைக் கையில் வைத்தபடி வெடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் சாலையில் பட்டாசுகளை வெடித்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாமக்கல் நகர் பகுதியில் பரமத்தி பிரதான சாலையில், இரவு நேரத்தில் இளைஞர்கள் மதுபோதையில் சாலையின் நடுவில் நின்று கொண்டு, வான வெடியை ஆபத்தான முறையில் கையில் வைத்தபடி வெடித்துள்ளனர். இச்சம்பவத்தினால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து சென்றனர்.
இந்நிலையில், மது போதையில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மது போதையில் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.