நெல்மணியில் எழுத்து பழகும் பிஞ்சு கைகள்.. தருமபுரியில் கோலாகலமாக நடந்த வித்யாரம்பம்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

தருமபுரி: நவராத்திரியின் பத்தாம் நாளான இன்று (அக்.24) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியான வித்யாரம்பம் தருமபுரியில் கோலாகலமாக நடைபெற்றது. 

கேரள சமாஜத்தின் சார்பில் புதிதாக பள்ளிக்குச் செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கேரள சமாஜத்தின் தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பகவதி கோயில் மேல் சாந்தி பகவதி சுவாமி நம்பூதிரி வந்து குழந்தைகளை வாழ்த்தினார்.

லட்சுமி, சரஸ்வதி, பகவதி பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு நாக்கில், ஸ்ரீ ஹரி கணபதி நமஹ என தங்க ஊசியைக் கொண்டு எழுதி, எழுத்து அறிவித்தலை தொடங்கி வைத்தனர். மேலும், பிள்ளைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஸ்ரீ ஹரி கணபதி நமஹ என்று எழுத வைத்து, குழந்தைகளுக்கும் அவரது பெற்றோருக்கும் ஆசி வழங்கினர். பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாட புத்தகத்தை வழங்கினர். சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் வித்யாரம்பம் எழுத்து அறிவித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.