thumbnail

வேலூர் சாத்கர் மலையில் அள்ள அள்ள வந்த சாராய ஊரல்!

By

Published : Apr 13, 2023, 11:07 AM IST

வேலூர் மாவட்டம்:  கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் விதமாகக் காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு, சாத்கர் மலைப் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசியத் தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் மலைப் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில் சாராயம் காய்ச்சும் இடத்தை கண்டறிந்து 3000 லிட்டர் கள்ளச் சாராய ஊரல் மற்றும் அதற்கான மூலப் பொருட்களை அதிரடியாக அழித்தனர். 

மேலும் இந்த ஊரல்களை யார் பதுக்கி வைத்தது? சாராய விற்பனையானது எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்து குடியாத்தம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பரின் பிறந்த நாளில் 'கண் தானம்' - மயிலாடுதுறை 'கில்லி' குழுவுக்கு குவியும் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.