அறுவை சிகிச்சைக்காக ஆதார் அட்டை, காப்பீடு திட்டம் வழங்க முதலமைச்சருக்கு கூலித்தொழிலாளி கோரிக்கை! - ஆதார் அட்டை
🎬 Watch Now: Feature Video
வேலூர்: குடியாத்தம் கல்லூர் கிராமம், தோபி காலனி பகுதியைச் சேர்ந்தவர், அகமத்பாஷா என்ற ஆமத். 42 வயதான இவருக்கு 1996ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
மேலும், இவரது மனைவிக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அகமத் பாஷா அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். மேலும், அகமத் பாஷா கடந்த மாதம் 4ஆம் தேதி வேலைக்காக குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்வதற்காக அரசு பேருந்து மூலம் சென்றபோது குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நிலை தடுமாறி கீழே விழுந்ததால், தனது இடது கால் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகமத்பாஷா, சிகிச்சை பலனின்றி இடது கால் முற்றிலும் துண்டாகி கால் இழந்து விட்டார். தற்போது இவரது பெற்றோர் மற்றும் மனைவி யாரும் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு ரேஷன் அட்டையும், ஆதார் அட்டையும் எந்த ஒரு அடையாளமும் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தனக்கு ஆதார் அட்டையும், முதல்வர் காப்பீடு திட்டமும் வழங்க முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.