மருதமலை கோயில் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 14, 2023, 8:46 PM IST
கோயம்புத்தூர்: கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் இந்த மருதமலை முருகன் கோயிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன.
ஒன்று வாகனங்களில் செல்லும் சாலைப்பாதை. மற்றொன்று படிக்கட்டுகள் உள்ள பாதை. சாலை வழி மலைப்பாதையில் பக்தர்களின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் பேருந்தும் இயக்கப்படும்.
இந்நிலையில், கோயிலுக்கு செல்லும் சாலை வழிப்பாதையில் சாலை புனரமைக்கும் பணி ஒரு மாத காலமாக நடைபெற்று வந்ததால், அவ்வழி மூடப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சாலை புனரமைப்பு பணிகள் தற்போது முடிவடைந்ததை அடுத்து, இன்று (நவ.14) முதல் சாலை வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், கந்த சஷ்டி நிகழ்விற்காக ஏராளமான பக்தர்கள் இன்று கங்கணம் கட்டும் நிலையில், இன்று முதல் சாலை வழிபாதையும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.