ரூ.30 லஞ்சம் கேட்டு வாகன ஓட்டுனர் தாக்குதல்! வனத்துறை ஊழியர் வீடியோ வைரல்! - assaulted the driver

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 23, 2023, 8:42 PM IST

ஈரோடு: பண்ணாரி வனத்துறை சோதனை சாவடியில் 30 ரூபாய் லஞ்சம் கேட்டு வாகன ஓட்டுனரை தாக்கியதாக, வனத்துறை ஊழியருடன் வாகன ஓட்டுனர்கள் வாகுவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.

வனத்துறை சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பண்ணாரி வன சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டுனரிடம் பணியில் இருந்த வனத்துறை ஊழியர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் வனத்துறை ஊழியர் வாகன ஓட்டுனரை சோதனை சாவடி கட்டடத்துக்குள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த மற்ற வாகன ஓட்டுனர்கள் சோதனை சாவடி முன்பு முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வளைதலங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என வாகன ஓட்டுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.