ஆஷாட நவராத்திரி: தஞ்சையில் வராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்! - நவராத்திரி கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி உடனாகிய நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் அமைந்து உள்ளது. இதில் நவகன்னியர்களுடன் தனி சன்னதி கொண்டு வராஹி அம்மன் அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில், தனி சன்னிதியில் வடக்கு திசையை நோக்கிய நிலையில் பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமூண்டி ஆகிய நவ கன்னியர்களும் அருள்பாலிக்கின்றனர்.
இதில் வராஹி அம்மனுக்கு, ஆனி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் 7 நாட்களை ஆஷாட நவராத்திரியாக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு, இத்தகைய ஆஷாட நவராத்திரி விழா, கடந்த 18ஆம் தேதி முதல் வருகிற 27ஆம் தேதி வரை சுமார் 10 நாட்களுக்கு நாள்தோறும் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரமாக இனிப்பு, மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனகாப்பு, மாதுளை, நவதானியம், வெண்ணெய், காய்கறி, புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், 4ஆம் நாளான நேற்று இரவு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, புது பட்டு வஸ்திரம் சாற்றி, மலர் மாலைகள், மஞ்சள் கிழங்கு ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்காண வளையல்களை கொண்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நிவேதனம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.