வீடியோ: ராட்சச பலூனில் திருமணம்... அந்தரத்தில் இணைந்த ஜோடி... - மணமக்கள் ப்ரீத்தி ரவி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17040317-thumbnail-3x2-a.jpg)
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் செக்டார்-7 எனும் இடத்தில் நேற்று (நவ.25) இரவு ப்ரீத்தி மற்றும் ரவி என்ற இருவருக்கும் ராட்சச பலூனில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண சடங்குகள் முடிந்ததும் மணமக்கள் இருவரும் அங்கிருந்த வெப்பக் காற்று பலூனில் ஏறி தரையில் இருந்து 100 அடி உயரத்திற்கு சென்றனர். பின்னர் ப்ரீத்தியும் ரவியும் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து சத்தியம் செய்து கொண்டனர். இதனையடுத்து உயரத்தில் பறந்து கொண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST