Video: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! - viral video
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை ஆசனூர் வனப்பகுதியைவிட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாயத்தோட்டத்திற்குள் புகுந்து குடியிருப்பின் அருகே முகாமிட்டன. காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்ட மலைக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST