எப்புட்ரா!!... 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள் - தருமபுரி மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கனவாகாடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் தீனா தம்பதியின் மகள்கள் இரட்டையர்களான ரமாதேவி லட்சுமி தேவி. இவர்கள் இருவரும் காணிகார அள்ளி பகுதி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்களான அக்கா தங்கை இருவரும் 347 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அக்காவும் தங்கையும் ஒரே மதிப்பெண் பெற்றது ஊரில் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி.. வட்டார வளர்ச்சி அதிகாரி மீது குற்றச்சாட்டு!
பாடப்பிரிவுகளில் மதிப்பெண்களில் மாற்றம் இருந்தாலும் மொத்த மதிப்பெண்களாக 347 என அக்காவும் தங்கையும் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். ரமாதேவி லட்சுமி தேவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது போலவே மதிப்பெண்ணிலும் வேறுபாடு காட்டாமல் தோ்ச்சி பெற்றிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரி எம்.எல்.ஏவிடம் பொய் சொல்லி கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்!!