இது என்னடா டிப்பர் லாரிக்கு வந்த சோதனை..!
🎬 Watch Now: Feature Video
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, இந்திரா நகர், ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் வியாழக்கிழமை காலை 4 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று கோட்டூர்புரத்திலிருந்து, ஒ.எம்.ஆர் நோக்கி வந்த போது நடைமேடை அருகே தவறுதலாக ஹைட்ராலிக் தூக்கிக் கொண்டதால் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் நடை மேம்பாலம் ஒரு பக்கமாக உடைந்தது. எனவே, பாதுகாப்பு கருதி பொதுமக்கள் நடை மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சாலையில் ஒரு பக்கம் தடுப்புகள் வைக்கப்பட்டு, மேம்பாலத்தில் சிக்கிய லாரியை கிரேன் மூலம் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நடை மேம்பாலத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, லாரியின் சில பகுதிகளை வெல்டிங் வைத்து துண்டித்தனர். இதனால், 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் இழுக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. நடை மேம்பாலம் சேதமடைந்ததால், பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேம்பாலத்தை சீரமைத்துத் தர கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'திமுக அரசு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின் தடை ஏற்படுகிறது' - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!