திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வைகாசி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.16 கோடி!! - உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் உவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலத்திற்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைகாசி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள். அண்ணாமலையார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் சுமார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
வைகாசி மாதத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு 7 மணி அளவில் நிறைவு பெற்றது. இதில் 2 கோடியே 16 லட்சத்து 04 ஆயிரத்து 221 ரூபாய் மற்றும் 165 கிராம் தங்கமும், 2,213 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!