இயற்கை முறை விவசாயத்தை மேம்படுத்த நாற்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்! - tirupattur district collector baskara pandiyan
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதியூர் பகுதியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, ஊராட்சியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்; மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரித்து அனைவரும் தனித்தனியே குப்பைகளை போட வேண்டும் என்றும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வண்ணங்களில் பிளாஸ்டிக் கூடைகளை வழங்கினார். மேலும் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும்; அதற்கு மாற்றாக அனைவரும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், குப்பையில்லா கிராமத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, ஆதியூர் பகுதியில் இயற்கை முறையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நாற்றுகளை நட்டு ஊக்கப்படுத்தினார். பின்னர், இந்நிகழ்ச்சியை அடுத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: கீழமரத்தோணி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த உறவுகள் ஒன்று கூடுதல் நிகழ்வு!