திருச்செந்தூர் முருகன் கோயில் மே மாத உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா? - தூத்துக்குடி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாதம் உண்டியலில் காணிக்கையாகப் பக்தர்கள் செலுத்திய பணம், நகைகள் எண்ணும் பணி கோயில் காவடி பிறை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப் பணி குழுவினர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் நிரந்தர உண்டியல் மூலம் 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 ரூபாய் காணிக்கையாகக் கிடைத்து உள்ளது. அதில் தங்கம் 2 கிலோ 800 கிராமும், வெள்ளி சுமார் 25 கிலோவும் மற்றும் அயல் நாட்டு நோட்டுகள் 292-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
காணிக்கை எண்ணும் பணி விறுவிறுப்பாக, சுமார் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு எண்ணப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மே மாத்தில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.
இதையும் படிங்க: Aavin Milk: ஆவின் பால் திருட்டா? - ஒரே நம்பரில் இரு மினி லாரிகளால்.. வேலூரில் நடந்தது என்ன?