பர்வதமலையில் பற்றிய தீ - 2 நாட்களாக நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு - பருவதமலை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18243749-thumbnail-16x9-parvathamalai.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தென்மாதிமங்கலம் அருகே பர்வதமலை அமைந்துள்ளது. சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பர்வதமலையின் மீது, ஸ்ரீ பருவதமலை மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில் உள்ளது.
இந்த மலையின் மீது ஒவ்வொரு பௌர்ணமி, அமாவாசை மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் இந்த 4 ஆயிரத்து 560 அடி உயரம் உள்ள மலையின் மீது ஏறிச்சென்று, ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், இந்த மலையின் அடிவாரப் பகுதிகள் மற்றும் மையப் பகுதிகளில் அடிக்கடி சிலரால் தீப்பற்ற வைக்கப்பட்டு, விபத்து ஏற்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பர்வதமலையின் அடிவாரம் மற்றும் மையப் பகுதிகளில் தீப்பற்றி எரிகிறது.
ஆனால், தீ விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் வனத்துறை இந்தத் தீயினை அணைக்கும் முயற்சியில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் பர்வதமலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தினால், அங்கு வரும் பக்தர்கள் மலையின் மீது ஏறத் தயக்கம் காட்டி வருகின்றனர்.