தனியார் பள்ளி பேருந்தை ஓட்டிப் பார்த்த மாவட்ட ஆட்சியர்! - TNFRS
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் தரம் குறித்த ஆய்வு இன்று (மே 17) நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின்போது பள்ளி பேருந்துகள் இயங்கும் தன்மை, பேருந்துகளின் தரம் மற்றும் பேருந்துகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். இன்று (மே 17) முதல் நாள் ஆய்வின் போது 121 பள்ளிகளில் இருந்து 580 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பேருந்துகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி பேருந்துகள் இயங்கும்போது திடீரென ஏற்படும் அசம்பாவிதங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், தீயணைப்பு துறை சார்பில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பள்ளி பேருந்துகளை தானே ஒட்டி சென்று ஆய்வினை மேற்கொண்டார்.