தேனி கௌமாரியம்மன் திருக்கோயில் தீச்சட்டி திருவிழா! - today news
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 600 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த கிராம கோயிலில் ஒன்றான அருள்மிகு கௌமாரியம்மன் கோயிலின் 3 நாட்கள் நடைபெறும் ஆனி பெருந்திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா கடந்த ஜூலை 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் 2வது நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் பெரியகுளத்தைச் சுற்றி உள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால், இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.