Theni - 'தேங்காய்க்கு உரிய விலை பெற்றுத்தாங்க' - விவசாயிகள் போராட்டம்
🎬 Watch Now: Feature Video
தேனி: தேங்காய்க்கு உரிய விலை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் உரித்த தேங்காய் கிலோவிற்கு ரூ.50-ம்; கொப்பரை தேங்காய் ரூ.145-க்கும் அரசு கொள்முதல் செய்வதுபோல் தமிழக அரசும் அதே விலைக்கு தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை மரத்திற்கு இன்ஸ்யூரன்ஸ், மருந்து, உரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கிட வேண்டும் என்றும்; மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதலின்படி தேங்காய் கொள்முதல் செய்திட வேண்டும் எனவும்,
நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டத்தின் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்று தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க :கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனை; ஒரு கிலோ ரூ.147