Koovam River: கரை புரண்டு ஓடும் தண்ணீர்..! கூவத்தைச் சுத்தம் செய்த மழை நீர்..! - today latest news
🎬 Watch Now: Feature Video
Published : Dec 5, 2023, 8:03 PM IST
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் வாலாஜா சாலை, மவுண்ட் ரோடு, அண்ணா சாலை, சேப்பாக்கம், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் பிற தாழ்வான பகுதிகள் உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும், சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. இதனை அடுத்து சென்னையில் உருவாகும் கழிவுநீர் கூவத்தில் கலந்து ஆற்றின் தன்மை மாறி எப்பொழுதும் சாக்கடை நீர் செல்லும் கால்வாய் போல் காட்சியளித்த கூவம் ஆற்றுக்கு அருகே உள்ள ஏரிகளில் நிரம்பிய மழைநீர், கூவம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்பொழுது கூவம் ஆற்றில் இரண்டு கரைகளும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது மேலும் ஆற்றிலிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், கழிவுப் பொருட்கள் பாலத்தின் அடியில் அடைக்காத வகையில் காவல்துறையினர் அவற்றை அகற்றி வருகின்றனர். பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாக நேப்பியர் பாலம் வழியே கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.