துணிக்கடையில் கைவரிசை காட்டிய துணிகர பெண்கள் - சிக்கிய சிசிடிவி - துணி கடையில் திருடிய சகோதரிகள்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் நடமாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வெளிப்புறங்களில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் வேளையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இயங்கி வரும் பிரபலமான துணிக்கடையில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
அந்த கடைக்குச் சென்ற இரண்டு பெண்கள், தாங்கள் ஏற்கனவே வாங்கிய துணிகளுக்கு கடையில் கொடுக்கப்பட்ட பைகளில் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, அங்கிருந்த ஊழியர்களுக்குத் தெரியாமல் கையில் கிடைத்த துணிகளை அந்த பைகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
துணிக்கடையில் தினம்தோறும் நடைபெறும் நிகழ்வுகளை ஆராயும் சிசிடிவி கண்காணிப்பு ஊழியர்கள் இந்த காட்சிகளை ஆராயும்போது இதனைக்கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் பல்வேறு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள whatsapp குழுவுக்கும் பகிரப்பட்டது.
இதில், அந்தப் பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்; அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் எனவும் தெரியவந்தது. மேலும், சகோதரிகள் இருவரும் மிகவும் செல்வ செழிப்பான குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது சகோதரிகள் இருவர் பிரபல துணிக்கடையில் துணிகளைத் திருடும் சிசிடிவி காட்சிகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரூ.44 லட்சத்துடன் கேஷியர் எஸ்கேப்.. சுற்றி வளைத்த போலீசார்.. வெளியான சிசிடிவி