தேனி எலிவால் அருவியில் நீர்வரத்து குறைவு - ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள் - தேனி அருவிகள்
🎬 Watch Now: Feature Video

தேனி: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவிக்கு மேற்குத் தொடர்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையினால் நீர் வருகின்றது. இந்த அருவி தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாகவும்; இந்தியா அளவில் 6ஆவது உயரமான அருவியாகவும் உள்ளது. இதனால், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எலிவால் அருவியையும் இயற்கை அழகையும் பார்த்து ரசித்துச் செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக எலிவால் அருவியின் நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்யாத நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது அருவிகளில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்பொழுது கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் எழில்மிகு தோற்றத்தை பார்த்துச் செல்வர்.
இந்நிலையில், நீர்வரத்து குறைந்து காணப்படும் எலிவால் அருவியை காணும் சுற்றுலாப் பயணிகள், அருவில் நீர் வரத்து குறைந்திருப்பதால் ஏமாற்றம் அடைகின்றனர். மிகக் குறைந்த அளவு நீருடன் காணப்படும் அருவியில் கொட்டும் நீரின் அழகை சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்தும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: கோயில் கோபுர கலசம் திருட்டு!