குன்னூர் பழக் கண்காட்சி; பழங்களாலான ராட்சத உருவங்களைக் காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - the nilgiris
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் 'கோடை சீசன்' நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, உதகையில் 'ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி' என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு நாள் நடைபெறும் 63வது பழக் கண்காட்சி இன்று (மே 27) துவங்கியது.
இதில், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாப்பழம், பப்ளிமாஸ், வாழை, எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட 1.5 டன் அளவிலான பழங்களைக் கொண்டு அலங்கார வளையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 18 அடி உயரம், 5 அடி அகலத்தில் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மெகா சைஸ் அன்னாசிப் பழம், பழங்களால் ஆன பழக்கூடை, மண் புழு, பிரமிடு, மலபார் அணில் உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இவற்றை கண்டு மகிழ்ச்சியடையும் சுற்றுலாப் பயணிகள் அவைகளுடன் நின்று புகைப்படங்கள் எடுத்து உற்சாகமடைந்து வருகின்றனர். இந்த பழக் கண்காட்சியை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இத்தைய அருமையான பழக் கண்காட்சி வரும் ஞாயிற்று கிழமையோடு நிறைவு பெற உள்ளது.
இதையும் படிங்க: கோடை விழாவின் 2ம் நாள்..குடும்பத்துடன் குவிந்த சுற்றுலாப் பயணியர்..