தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்களை கவர்ந்த இளைஞர்களின் கம்பத்து ஆட்டம் - இளம் பெண்களை கவர்ந்த கம்பம் ஆடும் விழா
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 6ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி கோயில் முன் மிகப் பிரம்மாண்டமாகக் கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு பெண்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி மஞ்சள் பூசி வழிபட்டனர். இதனிடையே, நேற்று (ஏப்.10) இரவு நேரத்தில் பாரம்பரிய நிகழ்ச்சியான, கம்பத்தை சுற்றி இளைஞர்கள் கம்பம் ஆடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு கம்பம் ஆட்டம் ஆடினர். மத்தள இசைக்கு ஏற்ப இளைஞர்கள் சலங்கை கட்டி ஆடினர். கம்பத்தைச் சுற்றி வந்து ஆடும் இளைஞர்களின் கம்பத்து ஆட்டம் பெண்களை மிகவும் கவர்ந்தது. மத்தள இசை இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஆடும் ஆசை ஏற்படுத்தியது. குழந்தைகளும் கம்பம் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த கம்பத்து ஆட்டம் நள்ளிரவு 2 மணி நீடித்தது. இளைஞர்களின் கம்பத்து ஆட்டம் வரும் புதன்கிழமை (ஏப். 13) வரை தினந்தோறும் நடைபெறும்.